Monday, March 10, 2008

கவிதையான வாழ்வு

அதிகாலை பனித்துளி,
கொஞ்சும் காலை வெய்யிலில் செல்ல நாயுடன் நடை.
அமைதியான பயணம்.
தோழியுடன் நீண்ட நேரப்பேச்சு.
மலர் சொரியும் பூங்கா.
கவிதையான வாழ்வு எனது.
அனைத்தும் கிடைக்கிறது எனது கேபினின் இரண்டடி மானிட்டரில் வரும் FORWARD MAILலில்மட்டும்.

Thursday, February 21, 2008

நிறம்

புத்தாடை அணியும்போது அம்மா கூறினாள்" துக்கத்தின் நிறம்தான் கறுப்பு."நல்ல வேளை என் எதிரில் கண்ணாடி இல்லை.

Wednesday, February 20, 2008

தனிமை


தனிமை என்பது எனக்கு யாரும் இல்லாததல்ல.
நீ இல்லாதது மட்டுமே.

ஏமாற்றங்கள்

பனி பொழியும் இரவுகளில் போர்த்திக் கொள்ள இதமாக இருக்கிறது
நீ தந்த ஏமாற்றங்கள்.

Wednesday, January 23, 2008

தெரியுமா??

எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னையல்ல்ல என் கவிதைகளைத்தான் என்று. ஆனால் உனக்கு தெரியுமா உன்னை விரும்புவது என் கவிதைகளலல்ல நான் தான் என்று.