அன்பே சிவம்
அன்பே சிவம்.
அவன் கையிலும் ஆயுதம்.
Sunday, December 20, 2009
Tuesday, January 6, 2009
அறியாமை
கோவிலின் உட்பிரகாரத்தில் இருந்த கடவுளின் ஓவியத்தை தொட்டு கும்பிட்டது குழந்தை.
பெருஞ்சிரிப்புடன் "சாமி உள்ளே இருக்குதுடா" என்றாள் அம்மா.
புரியவில்லை யாருக்கு அறியாமை என்று.
Wednesday, October 8, 2008
உணர்வுகள்
அரையிருளில் காதலின் வெளிச்சத்தில் தொடங்குகிறது நம் மூர்க்க யுத்தம்.
இலக்கணங்கள் ஏதுமில்லை.
வலமிடம் தெரியவில்லை.
உச்சி முகர்ந்து,உள் நரம்பு துடிக்க,
திடீரென அறிவிக்கிறாய்.
யுத்தம் முடிந்து விட்டதென்று.
முதுகு காட்டி துயிலும் எண் கணவா,
என்றெனும் உண்ர்ந்திருக்கிறாயா எனக்கும் உணர்வுகள்
உண்டென்று?
உண்டென்று?
காதல்?
தினமிரவு நீ நடத்தும் மூர்க்க யுத்தத்தில் முடிந்து போவதில்லை தாம்பத்யம்.
அரையிருட்டு வெளிச்சத்தில் நீ வெறியுடன் தரும் இதழ் முத்தம் மட்டுமல்ல,
பகலினில் அன்புடன் தரும் ஒற்றை நெற்றி முத்தமும் காதல் தான். புரிந்து கொள் என் கணவா........
இலங்கை
அடக்க வேண்டுமென்று சிங்கங்கள்.
பொங்கி போராடும் புலிகள்.
இதழ்களில் புன்னகையோடு அமைதியாய் காத்திருக்கிறார் புத்தர்.
அவைகள் மனிதர்களாக மாற.
மெரீனா
அண்ணாவின் சமாதி மட்டுமல்ல,
எத்தனையோ காதல்களின் சமாதியும்
கடற்கரை மணலினில்.
முடிவினில் அண்ணா என்று அழைத்ததால்.
Tuesday, September 23, 2008
நோய்
தலை தொட்டு,
கழுத்து தடவி,
முகம் பதறி நீ தவிக்கையில்
தோன்றுகிறது,
காய்ச்சலும் அழகாகத் தானிருக்கிறது.
Wednesday, September 3, 2008
Tuesday, September 2, 2008
Monday, April 14, 2008
பொன் மாலைப்பொழுதுகள்
Monday, March 10, 2008
கவிதையான வாழ்வு
அதிகாலை பனித்துளி,
கொஞ்சும் காலை வெய்யிலில் செல்ல நாயுடன் நடை.
அமைதியான பயணம்.
தோழியுடன் நீண்ட நேரப்பேச்சு.
மலர் சொரியும் பூங்கா.
கவிதையான வாழ்வு எனது.
அனைத்தும் கிடைக்கிறது எனது கேபினின் இரண்டடி மானிட்டரில் வரும் FORWARD MAILலில்மட்டும்.
கொஞ்சும் காலை வெய்யிலில் செல்ல நாயுடன் நடை.
அமைதியான பயணம்.
தோழியுடன் நீண்ட நேரப்பேச்சு.
மலர் சொரியும் பூங்கா.
கவிதையான வாழ்வு எனது.
அனைத்தும் கிடைக்கிறது எனது கேபினின் இரண்டடி மானிட்டரில் வரும் FORWARD MAILலில்மட்டும்.
Thursday, February 21, 2008
நிறம்
புத்தாடை அணியும்போது அம்மா கூறினாள்" துக்கத்தின் நிறம்தான் கறுப்பு."நல்ல வேளை என் எதிரில் கண்ணாடி இல்லை.
Wednesday, February 20, 2008
Wednesday, January 23, 2008
தெரியுமா??
எனக்கு தெரியும் நீ விரும்புவது என்னையல்ல்ல என் கவிதைகளைத்தான் என்று. ஆனால் உனக்கு தெரியுமா உன்னை விரும்புவது என் கவிதைகளலல்ல நான் தான் என்று.
Subscribe to:
Posts (Atom)